kumbabishekam

உலகில் சிருஷ்டிக்கபட்ட ஸகல இந்துக்கள் ஐந்துக்களுக்கும் சக்தியின் நிமித்தம் தோற்றுக்கப்பட்டதை யாவரும் அறிவர் அப்படிபட்ட சக்தியை தாயெனவும் மாரியம்மன் எனவும் நாகசக்தியாகவும் நாகாத்தம்மன் எனவும் போற்றி கொண் டாடி வருகிறோம்.

நமக்கு எல்லா ஐஸ்வரிய பாக்கியங்களையும் கொடுக்க வேண்டி சிம்ஹாசனத்தில் அமர்ந்து ராஜ்ய பரிபாலணம் செய்து கொண்டு கண் கண்ட தெய்வமாய் கலியுக சக்தியாய் காட்சி அளிக்கும் ஸ்ரீ கர்பரகஷாம்பிகை ஸமேத ஸ்ரீ முல்லைவன் நாதர் சுவாமி பரிவார சகிதம் ஆலயங்கள், வீமானங்கள், மஹா மண்டபம் இதர வேலைகள் அனைத்தும் சிற்ப சாஸ்திர முறைப்படி திருப்பணிகள் முடிவடைந்து நிகழம் விஜய வருடம் பங்குனி மாதம் 30ம் தேதி 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை திரயோதசி திதியும் உத்திரம் நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ நாகாத்தம்மன் ஆலயம், ஸ்ரீ கர்பரகஷாம்பிகை ஸமேத ஸ்ரீ முல்லைவன் நாதர் சுவாமி ஆலய பரிவாரம் சகிதம் நூதன அஷ்டபந்தன் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, நாதகானம், வேதபாராயணம், தேவார பாராயணம் பெரும் புண்ணியம் பயக்கும் யாக கேள்விளையும் பெருஞ்சாந்தி பயக்கும் திருக்குட நன்னிராட்டு நிகழ்ச்சியையும் தரிசித்து ஸ்ரீ நாகாத்தம்மன் அருள் பெற்று பேரானந்த பெருவாழ்வு பெற பத்தகோடிகள், பொது மக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.